பல ஆண்களை காதலித்து தன் வலையில் வீழ்த்திய பெண்.! ரூ.100 கோடி ஏமாற்றி சுருட்டியது அம்பலமானது.!!

கொள்ளையடிப்பது, திருட்டு சம்வங்களில் ஈடுபடுவது,மோசடி செய்வது போன்ற சம்பவங்களில் ஆண்களில் தான் ஈடுபடுகிறார்கள் என்றால் பெண்களுக்கு அதற்கு ஈடாக செயல்படுகின்றனர். சமீபகாலமாக பெண்களும் கொள்ளையடிப்பது, திருடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற சம்பவத்தில் தெலுங்கானவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி என்ற பெண் ஈடுபட்டுள்ளார்.

தன்னிடம் ரூ100 கேடி இருப்பதாக கூறி வாகன் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை பற்றி விசாரித்ததில் இதற்கு முன் பலரை காதலித்து ஏமாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சில தினங்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஷோ ரூமில் ரூ 15 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்து ஒரு கார் வாங்கியுள்ளார்.

இதே போல் மகேந்திரா ஷோ ரூமில் ரூ 75 லட்ச ரூபாய்க்கு காசோலை கொடுத்து நான்கு வாகனங்களை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்திய போது அது போலியானது என தெரியவந்தது .

பின்னர் இது குறித்து ஷோரூம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அந்த பெண் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அவர் பலரை காதலித்து திருமண செய்து ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*